பெரும்பாலும் பசும் பாலை தொடர்ந்து, சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த பசும்பாலிலும் தீமைகள் ஒளிந்திருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?
அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்களே, அது இதுதான். எந்த ஒரு பொருளையும், தேவையான அளவை தவிர்த்து, அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், உடலுக்கு பல்வேறு தீமைகள் வந்து சேரும்.
பாலில் கால்சியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கலோரிகள் உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றன. இந்த பாலை அதிகமாக சாப்பிடுவதால், உடலின் கால்சியம் சத்து அதிகரித்து, எலும்பு பிரச்சனைகள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.
அதோடு, இந்த பால் மிக விரைவில் ஜீரணமாகாத பொருள் என்பதால், அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பாலை பலரும், டீ, காபி என்று சர்க்கரை அதிகம் கலந்து சாப்பிடுகிறார்கள். ஆகவே, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
பாலில் அதிக அளவில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால், பாலில் இருக்கின்ற சத்துக்கள் உடலில் சேர்வது வெகுவாக குறைகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த பாலை அதிகமாக சாப்பிடுவதால், கொழுப்புகள் உடலில் அதிகமாக சேர்ந்து, இதய பிரச்சினைகளை உண்டாக்கலாம். நாள் ஒன்றுக்கு, மூன்று முறைக்குள் இந்த பாலை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.