ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி நேற்று எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன..
இந்நிலையில் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதிநீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.. தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்துவ சட்டம் 8(3)ஐ சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுளது..
எனினும் இது பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம் தான் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.. அரசியல்வாதிகள் தொடர்பான வழக்கில் மேலும் பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரையில் ராகுல்காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..