fbpx

சினிமாவுக்கு முழுக்கு..!! பிரபல அரசியல் கட்சியில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனியார் யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “கீர்த்தி சுரேஷ் நல்ல திறமையான நடிகை. ஆனால், நயன்தாரா போல நாமளும் தனியாக நடிக்கலாம் என்று அசாத்திய நம்பிக்கை வந்ததுதான் அவருக்கு மைனஸாகிவிட்டது. அதேபோல, ரஜினி, கமல், அஜித் என முன்னணி ஹீரோக்களும் கீர்த்தி சுரேஷை கைவிட்டுட்டாங்க.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. என்றைக்கு ரஜினிக்கு தங்கையாக நடித்தாரோ, அப்பவே ஆட்டம் க்ளோஸ். எந்த ஒரு நடிகருக்கும், தங்கையாக நடித்தால், அடுத்த முறை அவருக்கு ஹீரோயின வாய்ப்பு கிடைக்காது. இது சினிமாவில் எழுதப்படாத சட்டம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் கைவசம் ரிசால்வர் ரீட்டா, மற்றும் கண்ணிவெடி என்ற 2 படங்கள் மட்டுமே உள்ளன. இந்த படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால், வேறு எந்த படமும் கீர்த்தி சுரேஷுக்கு இன்னும் கமிட் ஆகவில்லையாம். சினிமாவை விட்டு விலக முடிவெடுத்திருப்பதால், அவர் படங்களை கமிட் செய்யாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, சினிமாவைவிட்டுவிட்டு, படத்தயாரிப்பில் ஈடுபட போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, படத்தயாரிப்பு பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் நிலவி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் புது குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். அதாவது, “திருமணம் முடிந்ததும் கீர்த்தி சுரேஷ், விஜய்யின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது.

கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இவங்களுக்கெல்லாம் அரசியல் தெரியுமா..? சிறைக்கு சென்றிருக்கிறார்களா..? தியாகங்கள் பற்றி தெரியுமா..? மக்கள் பற்றி தெரியுமா..? இந்தம்மா சம்பளம் ரூ.5 கோடி, அந்தம்மாவுக்கு ரூ.7 கோடி, விஜய்க்கு 150 கோடி. மக்கள் பூராவும் தெருக்கோடி” என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Read More : ”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சி தான்”..!! ”நாங்கள் கிடையாது”..!! பிரதமர் மோடி பரபரப்பு பதிவு..!!

English Summary

Actress Keerthy Suresh’s wedding has ended in a grand manner. In this situation, a piece of information about Keerthy Suresh is being talked about a lot in the cinema circle.

Chella

Next Post

குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனையா? சீக்கிரமே விடுபட வீட்டு வைத்திய வழிமுறைகள்..!!

Wed Dec 18 , 2024
Dandruff issue during winter? Use THIS ingredient to get rid of flakes from hair

You May Like