fbpx

ஒண்ணுமே தெரியாமல் போய் சேதியை பரப்பும் கோபாலபுரம்…! கடுமையாக சாடிய அண்ணாமலை…!

மத்திய அரசு குறித்து திமுகவினர் செய்தியை பரப்பி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; Khelo India திட்டத்தின்‌ மூலமாக அனைத்து மாநிலங்களிலும்‌ விளையாட்டுவிரர்களை ஊக்குவிக்கவும்‌ விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்‌ மாநில அரசின்‌ திட்டப்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.ஆனால்‌ இந்த திட்டத்தைப்‌ பற்றி எதுவுமே தெரியாமல்‌, தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும்‌ எடுக்காமல்‌ பொய்களைப்‌ பரப்பி வரும்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌, திமுகவினர்‌ மற்றும்‌ கோபாலபுரம்‌ குடும்பத்தின்‌ ஊடகங்களால்‌ தமிழகத்திற்குத்‌ தலைகுனிவு.

இது ஒரு Demand Driven திட்டம்‌. மற்ற மாநிலங்கள்‌ இந்த திட்டத்தைச்‌சரியாகப்‌ பயன்படுத்தி மத்திய அரசிடம்‌ நிதி பெற்று தங்களது மாநிலவிளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்‌. மாநில பட்டியலில்‌ உள்ள விளையாட்டுத்‌ துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது, அதைச்‌ சரியாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

திருப்பதிக்கு போகப் போறீங்களா..? அப்ப முதல்ல இதை படிங்க...

Wed Aug 10 , 2022
விடுமுறை நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவஸ்தான்ம் கோரிக்கை விடுத்துள்ளது.. ஆந்திர மாநிலத்தின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்த கோயில் எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.. கோயில் பராமரிப்பு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்நிலையில், முதியோர் உள்ளிட்டோர் தங்களது […]

You May Like