fbpx

DMK Files-3..!! அப்செட்டில் அண்ணாமலை..!! பாஜக மேலிடம் இப்படி சொல்லிருச்சே..!!

DMK Files-3 வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் DMK Files-1 அண்ணாமலை வெளியிட்ட நிலையில், அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து DMK Files-2இல் அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகின. மேலும், DMK Filesஇன் 3-வது பாகத்தை ஆடியோ மூலம் இந்தாண்டு ஜனவரி மாதம் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி டி.ஆர். பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா, ஜாஃபர் சேட் இடையேயான தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டார். இந்நிலையில், DMK Files-3ஐ முழுவதுமாக வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3ஆம் பாகம் குறித்து பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை பேசியதாகவும், அதற்கு பாஜக மேலிடத்தில் சரிவர பதில் வரவில்லை என கூறப்படுகிறது.

ஊழல் பட்டியலை இப்போது வெளியிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள். ஆகையால், அதை வெளியிடுவதற்கான சரியான நேரத்தை சொல்கிறோம். அதுவரை காத்திருக்குமாறு அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், திமுகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருக்க பாஜக மேலிடம் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More : BREAKING | இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

English Summary

While Annamalai had announced that DMK Files-3 would be released, information has leaked that the BJP leadership has blocked it.

Chella

Next Post

திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை!. மத்திய அரசு பதில்!

Thu Dec 12 , 2024
Central government: 18 வயதுக்கு குறைவான திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. ஒரு பெண் 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமாக கருதப்படுமா? என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,’ பாரதிய நியாய […]

You May Like