fbpx

அதிமுக திட்டங்களுக்கு திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை..! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு…!

முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்துக்காக, திமுக ஆட்சியில் பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காததால், அவை முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும், ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம் பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் ரூ.235 கோடி மதிப்பீட்டில் விழுப்புரத்தில் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்டம், காவிரி உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகியவை முழுமையாக செயல்படுத்தவில்லை. திருநெல்வேலி – இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை. ரூ.125 கோடியில் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணியில் 3 ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றை, பாலாற்றுடன் செய்யாறு வழியாக இணைக்கவும் மற்றும் நந்தன் கால்வாய்க்கு பாசன வசதியை உறுதி செய்யவும், இணைப்புக் கால்வாய் வெட்டும் திட்டத்தை மேற்கொள்ள சுமார் ரூ.320 கோடி தேவைப்படும் என்ற நிலையில், இந்த ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இவ்வாறு விவசாயிகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் பயன்படும் பல திட்டங்களை இந்த திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மக்கள்நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்பு காட்டப்படுகிறது.

மேலும், சென்னை முட்டுக்காட்டில் 5 லட்சம் சதுர அடியில், ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த அரசு டெண்டர் கோரியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள்நலத் திட்டங்களுக்கு உடனடியாக தேவையான நிதியை ஒதுக்கி, அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

DMK government does not allocate funds for AIADMK projects

Vignesh

Next Post

ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Sat Nov 9 , 2024
Unique Identification Authority of India has published an employment notification to fill the vacant posts.

You May Like