திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12 தீர்மானங்கள்
அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து – அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம். ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டு.
ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்க தீர்மானம்.
ஜனநாயகத்தையும் – “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலையும் தகர்க்க நினைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட மத்திய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரியநிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கடும் கண்டனம்.
வைக்கம் நூற்றாண்டு விழா” “குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதி பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி சமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாட தீர்மானம்.
தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைந்ததோர் திராவிட மாடல் நல்லாட்சி – அணிவகுக்கும் மக்கள் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி” என தி.மு.க செயற்குழு பெருமிதம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 மட்டுமல்ல – 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும் – சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.