fbpx

“நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்”..!! விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள பட்டுவெடு நாடார் திருமண மண்டபத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு, தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் 10 கருணை இல்லங்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”திமுக அரசு பெண்களுக்காக ஏற்படுத்திய திட்டங்கள் இந்தியா மட்டுமின்றி, உலகிற்கு வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. புதுமை பெண் திட்டம், உரிமைத்தொகை திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரை பார்த்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற கூட்டம் ஒன்று உள்ளது.

நீதி தேவதையின் ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி. தமிழ்நாட்டின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர். அறியாமையில் இருக்கும் சிலர் கூற்றுக்கு நிச்சயம் 2026இல் 200 தொகுதி இல்லை, 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனைப் பெற்றுத் தரக்கூடிய ஆட்சி இது. திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்படாக உள்ளது. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும்” என தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ”உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026இல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்” என்று திமுகவை சாடி பேசி நிலையில், இதற்கு பதலளிக்கும் விதமாக விஜய்யை சாடி அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

Read More : மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்..!! 290 + காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Some ignorant people are sure that DMK will win all 234 seats, not just 200 in 2026.

Chella

Next Post

”நீங்க தூக்குறதுக்கு முன்னாடி நானே விலகுறேன்”..!! விசிகவுக்கு கும்பிடு போட்டு தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜுனா..?

Sat Dec 7 , 2024
Aadhav Arjuna is planning to leave the VVIP and join the TDP before being expelled from the party.

You May Like