fbpx

உங்களை மட்டும் கொசு அடிக்கடி கடிக்கிறதா..? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிருவீங்க..!! காத்திருக்கும் ஆபத்து..!!

நமது வீடுகளில் இருக்கும் பெரிய தொல்லை என்னவென்றால் கொசு தான். மாலை பொழுது ஆரம்பித்தவுடன் கொசுவும் வந்துவிடும். இதனால் பல நோய் தொற்றுகளும் உண்டாகிறது. மனிதர்களைப் போலவே, கொசுக்களுக்கும் அவற்றின் சொந்த வாழ்வியல் சுழற்சி உள்ளது. பொதுவாக ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து தேனை எடுக்கின்றன. அதே சமயம் பெண் கொசு தான் மனிதர்களை கடிக்கிறது. பெண் கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் புரதங்களை எடுப்பதற்காக கடிக்கின்றன. மனிதர்களை கடிக்கும் போது பெண் கொசு உமிழ்நீரை இரத்தத்தில் செலுத்துகிறது.

இதனால், நமக்கு மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படுகிறது. கொசுவினால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது. கொசு கடிப்பதைத் தடுக்கவும், பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கொசு சிலரை மட்டும் அதிகம் கடிக்கும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். பெண் கொசுவானது அதனுடைய கண்பார்வை மற்றும் ஆண்டெனாக்கள் மூலம் அதன் இழக்கை கண்டறிந்து கடிக்கிறது.

கொசுவில் இருக்கும் இந்த சிறப்பு ஆண்டெனாக்கள் கார்பன் டை ஆக்சைடு, ஈரப்பதம், இரசாயன வாசனைகள் போன்றவற்றை கண்டறிய உதவுகின்றன. கொசுக்கள் வெளிர் நிறங்களை விட, நல்ல டார்க் நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிதிருப்பவர்களை அதிகம் கடிக்கிறதாம். மேலும், டவுசர் போன்ற குட்டையான ஆடைகளை அணிவது அதிக கொசு கடிக்க காரணம் ஆகும். டெங்குவை உண்டாக்கும் கொசு வகையான ஏடிஸ், கால்களில் கடிக்காமல், கை பகுதியில் அதிகம் கடிக்கிறது. அதே போல மலேரியாவை உண்டாக்கும் அனோபிலிஸ் வகை கொசுக்கள் கைகளை விட, கால்களில் தான் அதிகம் கடிக்கும்.

சில இரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் விரும்பி கடிக்கின்றன. “O” இரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதாக கூறப்படுகிறது. உங்கள் உடல் அதிகம் வெப்பத்தை வெளியிட்டால் கொசுக்கள் தேடி வந்து கடிக்கும். குறிப்பாக உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அதிக வெப்ப உற்பத்தியைக் கொண்டவர்களை கொசு அதிகமாக கடிக்கலாம். மேலும், அதிகப்படியான வியர்வை கொண்டவர்களையும் கடிக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் சில பாக்டீரியாக்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் தோலில் வியர்வையை உற்பத்தி செய்கிறார்கள். அது கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலிலும், உடலியலிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. கர்ப்பகால ஹார்மோன்கள் உடலில் அதிக வளர்சிதை மாற்றத்திற்கும் அதிக வெப்ப உற்பத்திக்கும் வழிவகுக்கும். இவை பெண் கொசுக்களை அதிகம் ஈர்க்கிறது. எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்களை கொசு அதிகம் கடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே போல மது அருந்துபவர்களை கொசு அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மது அருந்துபவர்களின் உடல் சூடு அதிகரித்து, உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, வியர்வை அதிகமாகிறது. இதன் காரணமாக கொசு அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது.

Read More : உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Chella

Next Post

போதை பொருள்.!! ஜாபர் சாதிக் வழக்கில் அமலாக்கத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Sat Apr 13 , 2024
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்களும், சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”கடந்த 2002ஆம் ஆண்டு அமலான சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்களில் சென்னை […]

You May Like