fbpx

மக்கள்…! மின்சார மீட்டர் பொருத்தப்பட்ட பகுதி ஈரமாக இருந்தா பயன்படுத்த கூடாது…! உயிருக்கே ஆபத்து

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது.

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக் கூடாது. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

Vignesh

Next Post

அடடா.! நோய்யை உங்க உடம்பிலிருந்து கத்தரிக்கும் காய் பற்றி தெரியுமா.? அனைத்திற்கும் தீர்வாகும் கத்தரிக்காய்.!

Thu Dec 28 , 2023
கத்தரிக்காய் நாம் சமையலில் பயன்படுத்தும் முக்கியமான ஒரு காய்கறி ஆகும். இது சாம்பார் கூட்டு பொரியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவற்றில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் ஆன்டிஆக்சிடென்ட் மூலக்கூறுகளும் நிறைந்துள்ளது. கத்திரிக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி […]

You May Like