தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. ஆம், சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் தொப்பை வந்து விட்டது. தொப்பை இருப்பது நமது அழகை கெடுப்பதோடு மட்டும் இல்லாமல், நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. இதை குடித்தால் தொப்பை குறைந்து விடும் என்ற விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்கள் செலவு செய்கின்றனர். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, அது நமது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் இயற்கையான பானங்களை குடிப்பது நல்லது. அந்த வகையில், தொப்பையை குறைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 50 கிராம் தனியாவை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். அதனுடன் 10 கிராம் மிளகினை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். பின்னர், 50 கிராம் கருஞ்சீரகத்தை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் வறுத்து வைத்துள்ள தனியா, மிளகு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். உங்கள் தொப்பையை குறைக்கும் பொடி ரெடி.. இப்போது இந்த பொடியை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 டம்ளர் தண்ணீரை சேர்த்து கொள்ளுங்கள். அதில், நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி, இதனை காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் மூன்றே நாட்களில் உங்களின் தொப்பை குறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.