fbpx

இளம் வயதிலேயே மூட்டு வலி வருகிறதா….? அப்படியென்றால் இதை குடித்து பாருங்கள்…..!

முன்பெல்லாம் வயதான நபர்களுக்கு தான் மூட்டு வலி வரும்.  அப்படி வயதான நபர்களுக்கு மூட்டு வலி வந்தால், அவர்கள் அதனை போக்குவதற்காக பல்வேறு மருத்துவங்களை செய்வார்கள். ஆனாலும், அவர்களால், அந்த மூட்டு வலியில் இருந்து கடைசி வரை விடுபட முடியாது. இந்த மூட்டு வலி வருவதற்கு காரணம், எலும்பு தேய்மானம் தான் என்று கூறப்படுகிறது.

இது வயதானவர்களுக்கு சரிதான். ஆனால், இளம் வயதில் இருப்பவர்களுக்கு கூட, தற்போது மூட்டு வலி வருவது சகஜம் ஆகிவிட்டது. ஆகவே இந்த மூட்டு வலியை போக்குவது எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, நடை பயிற்சி ஓட்டம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும்போது, தற்போது இளைஞர்களுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது என்பது, ஒரு ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்க பட்டிருக்கிறது.

ஆனால் இதனை தொடக்க நிலையிலே கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.  அதாவது உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வருகிறது என்பது தெரிந்தால், உடனடியாக இந்த பழக்கங்களை நீங்கள் கடைபிடித்து வந்தால், உங்களுக்கு மூட்டு வலி பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இளம் தலைமுறையினருக்கு மூட்டு வலி ஏற்பட்டால், இஞ்சி டீ குடிப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இஞ்சி, மஞ்சள் உள்ளிட்டவற்றை சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, தேன், எலுமிச்சம்பழம் சாறு போன்றவற்றை அத்தோடு சேர்த்து, குடித்து வந்தால், இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்படுவதை வெகுவாக தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் பசும்பாலுடன், சர்க்கரை, மஞ்சள் தூள், உள்ளிட்டவற்றை சேர்த்து, இரவில் பருகி வந்தால், மூட்டு வலி பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Next Post

"இனி உங்கள் குழந்தைக்கு ஈசியா ஆதார் எடுக்கலாம்"..!! இதுதான் பிராசஸ்..!!

Thu Sep 21 , 2023
ஆதார் அட்டை என்பது தற்போது அனைவரும் அவசியமானதாக மாறிவிட்டது. பிறப்பு தொடங்கி வாழ்வின் இறுதிவரை பயணிக்க போகும் விஷயம் என்றால் அது ஆதார் தான். அரசின் அத்தனை சேவைகளுக்கும், அத்தனை திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நாம் இந்த செய்தியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது எப்படி? எங்கே எடுக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம். உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல்களை எடுங்கள். அப்படியே அருகிலுள்ள […]

You May Like