fbpx

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? உடனே கோவிட் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்…! வேகமெடுக்கும் எரிஸ்…

உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அதன் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான EG.5 – அதாவது எரிஸ் என அறியப்படும் இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் இந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ் பழைய கொரோனா மாறுபாடுகளை காட்டிலும் தீவிரமானதில்லை எனவும், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது, இதனால் பயப்பட தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் WHO EG.5 மாறுப்பட்டை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

எரிஸ் வைரஸ் வேகமாக பரவுகிறது, நோய் எதிர்ப்பு தப்பிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவும் முந்தைய ஓமிக்ரான் மாறுபாடுகளை போலவே இருக்கும். சில நாடுகளில் EG.5 வகை மாறுபாடு வரும் வாரங்களில் அதிகரிக்ககூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட்-19 இன் புதிய EG.5 மாறுபாட்டை அடையாளம் கண்டுள்ளது, இது எரிஸ் என அழைக்கப்படுகிறது. இதன் தாக்கம் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பரவலாக உள்ளது. எரிஸ் நோய் தோற்று அதிக எண்ணிக்கையில் உள்ளதாக இருந்தாலும் தனிநபர்களை அதிக ஆபத்தில் வைக்காது.

எரிஸ் மாறுபாட்டிற்கு தனி அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், காய்ச்சல், தொண்டை புண், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, தலைவலி, புண் தசைகள், பிடிப்புகள், உடல் வலி, குமட்டல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். சில எரிஸ் நோயாளிகளுக்கு சுவை அல்லது வாசனை இழப்பும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் எரிஸ் மாறுபாட்டின் தாக்கம் குறைவாகவே உள்ளது. கடந்த மே 2023-ல் மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், சரியான நேரத்தில் சிகிச்சை பெற அவர்கள் உடனடியாக கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Kathir

Next Post

இமாச்சல பிரதேசத்தில் தொடரும் கனமழையால் சோகம்....!தோண்ட தோண்ட கண்டெடுக்கப்படும் மனித உடல்கள் மீட்பு பணியில் இறங்கிய இந்திய ராணுவம்….!

Thu Aug 17 , 2023
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருவதால், அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கே பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து, தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரிய அந்த மாநில அரசும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அந்த மாநில முதல்வரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து, அந்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள […]

You May Like