தற்சமயம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வேலைவாய்ப்பு குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்த ஆணையத்தில் காலியாக இருக்கின்ற deputy director, section officer, assistant section officer என பல்வேறு பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்கள் deputation மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கின்ற தகவலின்படி, மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அந்த பதவிகளுக்கு, 10 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அல்லது மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல 56 வயதிற்குட்பட்ட நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு pay Matrix level 6,8,10 மற்றும் 11 அளவிலான ஊதியங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமான மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 11.9.2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF 1
Download Notification PDF 2
.