fbpx

சற்று முன்…! நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம்…!

நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை

கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது. நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Doctors strike for 24 hours.

Vignesh

Next Post

ஸ்தம்பிக்கும் நாடு!. இன்றுகாலை 6 மணிமுதல் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!.

Sat Aug 17 , 2024
Stalling country! Doctors strike from 6 o'clock this morning!

You May Like