பொதுவாக சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். அதிலும் 40 வயதை தாண்டி விட்டாலே, சர்க்கரை நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எப்படி இயற்கையாக நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
அதாவது, நாவல் பழ விதைகள் சர்க்கரையின் அளவை வெகுவாக கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, நாவல்பழம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது. வெந்தயம் இரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும், மற்றொரு பொருளாக இருக்கிறது
அதேபோல, நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு அஜீரணத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதை சாப்பிட்டால், அஜீரண கோளாறு நீங்கும். அதே போன்று, நெல்லிக்காய் இரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸ், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றொரு பொருளாக வேப்ப இலைகள் இருக்கிறது. வேப்பிலைகளை நாள்தோறும் மென்று சாப்பிடுவதால், இரத்தத்தில், இருக்கின்ற சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும் என்று சொல்லப்படுகிறது. கற்றாழை, சர்க்கரை நோயை முற்றிலுமாக கட்டுப்படுத்துகிறது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும், லவங்கப்பட்டை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல நீரிழிவு நோயின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகை நோயாளிகளின் இரத்தத்தில் இருக்கின்ற குளுக்கோஸ் அளவை வெகுவாக குறைக்கும் தன்மை பாகற்காய்க்கும் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.