fbpx

“ஜெயிலுக்கு போகும்போது தவழ்ந்து போகாதீங்க..!” என நக்கலடித்த உதயநிதி ஸ்டாலின்.! ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய பரபரப்பு பேச்சு.!

சென்னையில் நடந்த திமுக முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் விரைவில் கைதாகக் கூடும் என்றும், கைதாகும்போது தவழ்ந்து செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இந்தப் பேச்சு அதிமுகவினர் இடையே சலசலப்பை உருவாக்கியது.

சென்னையில் உள்ள வேப்பேரியில் நடந்த, திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதில் பேசிய அவர், திமுக முடிவு செய்பவர் தான் பிரதமராக முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது என்று கூறி அதிமுகவை குறிப்பிட்டார். ஒரு நாள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் கைதாவார் என்று கூறுகிறார். அன்று மாலையே, ஈபிஎஸ் விரைவில் கைதாவார் என்று ஓபிஎஸ் கூறுகிறார். தனக்குத் தெரிந்து இருவருமே ஒன்றாக தான் கைதாக போகிறார்கள் என்றும் பேசினார். கைதாகி சிறைக்கு செல்லும்போது தவழ்ந்து, தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலிக்கும் என்பதால் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் கூறினார்.

அங்கிருந்த திமுகவினர் இந்த பேச்சுக்கு, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். எனினும் இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

பாஜகவுடன் இணையும் தேமுதிக..? தொகுதி ஒதுக்குவதில் அடம்பிடிக்கும் பிரேமலதா..!!

Mon Feb 5 , 2024
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த தேமுதிக, கடந்த மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து களம் கண்ட அந்த தேர்தலில் படுதோல்வியே அக்கூட்டணிக்கு கிடைத்தது. தேனியில் ஓபிஎஸ் மகன் தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக்கு அதிமுக பிடிகொடுக்கவில்லை. அத்துடன், மிகவும் […]

You May Like