பொதுவாக ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரை பார்ப்பதற்காக செல்லும் நபர்கள், அவசியம் வாங்கி செல்வது சாத்துக்குடி பழம் தான். இந்த சாத்துக்குடி பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சாத்துக்குடி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எடையை குறைக்க வெகுவாக உதவி புரியும். அதோடு, இந்த சாத்துக்குடி ஜூஸ் களைப்பை போக்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.
இனிப்பும், புளிப்பும், கலந்த இந்த சாத்துக்குடி ஜூஸில் நீர் சத்து அதிகமாக இருப்பதுடன், கார்போஹைட்ரேட் விட்டமின் சி, பொட்டாசியம், போன்றவையும், இருக்கிறது. அதோடு, இந்த சாத்துக்குடி ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இந்த சாத்துக்குடி ஜூஸ் பயன்படுகிறது. மேலும் குடல் புண், செரிமான பிரச்சனைகள் போன்றவை இருப்பவர்களும் இந்த சாத்துக்குடி ஜூஸை குடிக்கலாம்.