fbpx

வாகன ஓட்டிகளே..!! இனி எங்கும் தப்பிக்க முடியாது..!! தமிழ்நாடு அரசின் புதிய நடைமுறைகள் அமல்..!!

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஏற்படுத்தவும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அரசு தயாராகி வருகிறது. போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், மாநில-தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும், தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிக வேகம், ஹெல்மெட்/ சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது.

தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத் தொகையை செலுத்த வேண்டும். மேலும், குற்றத்தின் போது வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தை ஓட்டவில்லை என்றால், அவர் காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் முன், நிரபராதி என்று உரிமை கோரலாம். அவர் ஓட்டுநர் அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரத்தை வழங்கலாம் எனவும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

வெயிலின் கோர தாண்டவத்தால் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி…..! மகாராஷ்டிராவில் பரிதாபம்…..!

Tue May 16 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்டோ மூலமாக […]

You May Like