கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பரன்சிங் வழக்கு பதிவு விசாரணையை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா காலகட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தி வந்தன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஹிஜாப் தடை பிரச்சினை மற்றும் அரசியல் சாசன வழக்கு ஆகியவையும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிசம்பர் நான்காம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆறு வழக்கு விசாரணை வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆபாசப் படங்கள் திடீரென ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிங் வழக்கு விசாரணையிலும் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பிரன்சிங் வழக்கு விசாரணையை கர்நாடக நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக மத்திய சைபர் க்ரைம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் இது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு அளித்துள்ள புகாரில் நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் உனக்கு விசாரணையை மேற்கொண்டு இருந்தபோது அதில் இணைந்த மர்ம நபர் ஒருவர் இதுபோன்று ஆபாச படங்களை ஒளிபரப்பியதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் விசாரணை செய்து வருகிறது.