தீபாவளி பண்டிகை முன்னிட்டு அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் மூலம் கார்டுதாரர்களின் விவரம் சரிபார்க்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் ரேஷன் கடைகளில் கூடுதலாக பொருட்களை வழங்குவதை தமிழக அரசு ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில், விரைவில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.