அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
முன்னதாக நேற்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவில் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆகப் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அங்கே இருக்கும் பல முக்கிய கட்டிடங்கள் குலுங்கியன.
இதனால் பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களுக்கு சற்று அச்சத்தை கொடுப்பதாக கூறுகின்றனர்.