fbpx

சிரியாவில் மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்…! இது வரை 45,000 பேர் உயிரிழப்பு..‌.!

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹடாய் மாகாணத்தில் உள்ள டெஃப்னே நகரத்தை மையமாகக் கொண்டது என்று கூறியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஆனால் உயிர் சேதம் குறித்த எந்த தகவல்களும் இது வரை இல்லை.

சிரியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக துருக்கி அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 6-ம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் கிட்டத்தட்ட 45,000 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கிய அதிகாரிகள் 6,000 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளை பதிவு செய்துள்ளனர்.

Vignesh

Next Post

வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் அதிகமாக இருக்கும்...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Tue Feb 21 , 2023
தமிழகத்தில் வறண்ட என வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் 24-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like