fbpx

மின் துறையில் வேலைவாய்ப்பு…! உடனடியாக விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Computer Operator And Programming Assistant பணிகளுக்கு மொத்தம் பத்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700 முதல் அதிகபட்சம் ரூ.7,709 வரை உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட கோபிச் செட்டிப்பாளையதில் பணி வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/617a433ec98fe05e922a106b

Vignesh

Next Post

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது...? மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

Sat Nov 5 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,082 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 07 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
There is a risk of corona spreading more during festive season..! Central government warning to state governments..!

You May Like