அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட மாநகர அதிமுக செயலாளராக இருந்து வருபவர் வெங்கடாசலம். கடந்த அதிமுக ஆட்சியில் சில மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த இவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாகவும் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏ.வி.ராஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் 1991-96 ஆண்டுகளில் சேலம் பால் கூட்டுறவு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, நான் இயக்குநராக இருந்தேன். பால், நெய் கடத்தியது என எவ்வளவு ஊழல் செய்தார் என்பதை சொல்லவா…? அனைத்தும் தெரியும். அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60 லட்சம் ஏமாற்றியதாக அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மீது புகாரளித்ததால், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜி பேட்டி அளித்துள்ளார்.