fbpx

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் எடப்பாடி பழனிசாமி..!! எதற்காக தெரியுமா..?

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இபிஎஸ், பிறகு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என்று எடப்பாடிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும் என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதால், தங்களது தவறுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது. திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Read More : அதிர்ச்சி வீடியோ..!! 18-வது மாடியில் இருந்து பொத்தென கீழே விழுந்த இளம்பெண்..!! உயிர்பிழைத்த அதிசயம்..!!

English Summary

Edappadi Palaniswami’s side sought an apology in the Madras High Court for filing a petition mentioning him as AIADMK General Secretary.

Chella

Next Post

சற்றுமுன்.. வெளியானது 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்..!! எப்படி தெரிந்துகொள்வது?

Fri Jul 26 , 2024
The Tamil Nadu Directorate of Government Examinations has released the TN 12th Supplementary Result 2024 on July 26, 2024 on the official website.

You May Like