திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நவ.16அம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் முடக்கப்படுகிறது. மதுரையில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து 16.11.2024 (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பரங்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. தலைமையிலும், அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் அதிமுக செயலாளருமான வி.வி. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும்.
மு.க.ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அனைத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read More : இளம் வயதில் முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் என்ன..? இதற்கு என்ன சிகிச்சை..? என்ன சாப்பிடலாம்..?