fbpx

பரபரப்பு…! ஓபிஎஸ் மீது எடப்பாடி தொடுத்த வழக்கு… இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு…!

அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை எந்த தடையும் விதிக்கவில்லை.

எனவே, அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி இருந்தார். சமீபத்தில் அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்தார் . இந்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது . இந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

Vignesh

Next Post

பேச்சுலர்களுக்கான.. வத்த குழம்பு பொடி.. இன்ஸ்டன்ட்டாக இனி சாப்பிடலாம்.!

Thu Jan 11 , 2024
தேவையான பொருட்கள் : வரமல்லி – 100 கிராம்,, வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – 50 கிராம், மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு – 50 கிராம், உப்பு – தேவையான அளவு, புளி – 20 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 15, கடுகு – […]

You May Like