fbpx

தேங்காய் எண்ணெய் சமையல் எண்ணெயா…? 20 வருட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..‌!

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 20 வருட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணையாக வகைப்படுத்துவதா அல்லது அழகு சாதனப் பொருட்களின் கீழ் வகைப்படுத்துவதா என்ற 20 ஆண்டு கால க வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அழகு சாதன தயாரிப்புகளுக்கான வரி 18% ஆகும். ஆனால் சமையலுக்காகவும், அழகு சாதன பொருளாகவும் தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்கப்படுவதால் அதனை எந்த ஜிஎஸ்டி அடுக்கில் பொருத்துவது என கலால் துறை மற்றும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே நீண்ட வாக்குவாதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக தொடந்து வந்தது. நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உணவு பாதுகாப்பின் கீழ் உள்ள அளவுகோலை பூர்த்தி செய்யும் எண்ணெயை, சமையல் எண்ணையாக வகைப்படுத்தலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமத்திற்கு பயன்படும் தேங்காய் எண்ணெயை மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தலாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் வகைப்பாடு அதன் பிராண்டிங்கை பொறுத்தே அமையும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பயன்பாடுகளை வேறுபடுத்த தேங்காய் எண்ணெய்கள் மீது இது உணவுக்கானது அல்லது அழகுசாதனப் பொருள் என்று தெளிவான குறியீட்டு லேபிளின் அவசியத்தையும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

English Summary

Edible or hair oil? Supreme Court settles a 20-year-old debate on coconut oil

Vignesh

Next Post

1000 பேருக்கு வேலை... இன்று காலை 9.30 மணி முதல் நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...!

Fri Dec 20 , 2024
Jobs for 1000 people... A massive employment camp will be held from 9.30 am today

You May Like