சென்னையில் திரைப்பட பாணியில் கல்லூரியில் தங்கி படிக்கும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 20 வயது கல்லூரி மாணவியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் காதலரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த ஹை டெக் விபச்சார சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் சொகுசு விடுதியில் மூன்று இளம் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கும் விபச்சார தடுப்பு பிரிவிற்கும் வந்த ரகசிய தகவலை தொடர்ந்து அந்த விடுதியை முற்றுகையிட்ட போலீசார் அங்கு தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஜெயப்பிரதா என்ற 20 வயது பெண்ணையும் இதற்கு புரோக்கராக இருந்த பிரேம் தாஸ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் இளம் வயதிலேயே விபச்சார தொழில் நடத்தி வந்த ஜெயப்பிரதாவிடம் காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஜெயப்பிரதா கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவிகளை அவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பண தேவைகளை புரிந்து கொண்டு மூளைச்சலவை செய்தும் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கியும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இதற்கு அவரது காதலரும் உடந்தையாக இருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரது காதலரும் விபச்சார புரோக்கருமான அந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.