fbpx

மின் கட்டண உயர்வு அறிவிப்பு… அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!

பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் த.மோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள பீக் அவர்ஸ் பயன்பாட்டு மின் கட்டணத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதனை திரும்பப் பெற வேண்டும் என சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் 21.07.2023 அன்று தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை முதல்வரின் கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்றனர். தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும்வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும். 12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த அறிவிப்பு திருப்பதி காரமானதாக இல்லை என்பதால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள பீக் அவர்ஸ் பயன்பாட்டு மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு குரு நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த சூழலில் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் த.மோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். பேச்சுவார்த்தை அடிப்படையில் மின்சார துறையில் புதிய உத்தரவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Vignesh

Next Post

கனமழை அலெர்ட்!… 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!… மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

Tue Sep 26 , 2023
கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக இரவு முழுவதும் மழை பெய்தது. அந்த வகையில், கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் […]

You May Like