fbpx

“இனி ‘X’ ப்ரோபைலிலும் விளம்பரங்கள்..”! புதிய வசதியை அறிமுகம் செய்யும் எலோன் மஸ்க்.! அதிரடி அறிவிப்பு.!

உலகில் பெரும்பாலான மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமாக இருப்பது ட்விட்டர். இந்த நிறுவனத்தை வாங்கிய உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் இதன் பெயரை ‘X’ என மாற்றினார். மேலும் இந்த சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கூட ‘X’ புதிய அப்டேட்டில் ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டது .

இந்நிலையில் மேலும் பல வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு கிரியேட்டர் டார்கெட்டிங் என்ற புதிய வசதியை எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறார் எலோன் மஸ்க். இந்த புதிய அம்சத்தின் மூலம் விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்களை குறிப்பிட்ட கண்டன்ட் கிரியேட்டரின் படைப்புகளுடன் வெளியிடும் வசதியை விளம்பரதாரர்களுக்கு வழங்குகிறது.

இந்த புதிய அப்டேட்டின் மூலம் விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு கூடுதல் சிறப்பம்சங்களை ‘X’ வலைதளம் வழங்குகிறது. விளம்பரதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களின் வீடியோக்களுக்கு முன்பாக தங்களது விளம்பரங்களை இயக்க வைக்கும் வசதியை இந்த புதிய அம்சம் வழங்குகிறது. மேலும் இந்த விளம்பரங்கள் பயணர்களின் நியூஸ் ஃபீடிலும் படைப்பாளர்களின் ப்ரோபைலிலும் வெளியாகும் எனவும் ‘X’ தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முதல் ‘X’ வலைதளத்தின் ஆட்ஸ் மேனேஜரை பயன்படுத்தும் விளம்பரதாரர்கள் பிரீமியம் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோக்களுடன் இணைந்து தங்களது விளம்பரத்தை இயக்கலாம் என ‘X’ சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இது விளம்பரதாரர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவதோடு பார்வையாளர்களை அதிகமாக சென்றடையும். வீடியோக்களில் தங்களது விளம்பரங்களை வெளியிடும் வாய்ப்பையும் வழங்குகிறது.

தனிப்பட்ட கன்டன்ட் கிரியேட்டர்களின் ப்ரொபைலிலும் விளம்பரங்களை வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தவும் ‘X’ திட்டமிட்டுள்ளது. இந்த வசதி சர்ச்சைக்குரிய பதிவுகளோடு விளம்பரங்கள் வெளியாகும் அபாயத்தை குறைக்கிறது. இதன் மூலம் விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்கள், சர்ச்சைக்குரிய பதிவுகளோடு தொடர்புடையதாக இருப்பதைப் பற்றிய கவலையை போக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2022 இல் எலோன் மஸ்க் X ஐ வாங்கியதில் இருந்து அதன் விளம்பர வருவாயில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. சர்ச்சை கூறிய பதிவுகளுடன் தங்களது விளம்பரங்கள் வெளியாவதாக பல்வேறு முன்னணி விளம்பர நிறுவனங்கள் X தளத்தில் தங்களது விளம்பரங்களை வெளியிடுவதில் இருந்து பின் வாங்கின. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விளம்பரதாரர்களை ஈர்ப்பதற்காக ‘X’ வலைதளம் கிரியேட்டர் டார்கெட்டிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Next Post

"இளம் தலைமுறையை சீரழிக்கும் ஹூக்கா.." அதிரடி தடை விதித்த கர்நாடக அரசு..!! இதன் சமூக தீமைகள் என்ன.?

Tue Feb 13 , 2024
ஹூக்கா புகைப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்களைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ஹூக்கா புகைப்பதைத் தடை செய்வதாக, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் இளைஞர்களை” பாதுகாப்பதற்காக, “தீவிரமான உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு” ஹூக்கா புகைப்பது தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அனைத்து ஹூக்கா பொருட்கள் மற்றும் அவற்றை புகைக்க பயன்படும் ஷீஷா விற்பனை விற்பனை, கொள்முதல், […]

You May Like