fbpx

ரெடியா…? இன்று காலை 10 மணி முதல்…! இளைஞர்களுக்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…! தவற விடாதீர்கள்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன் படி, இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 700-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வரையிலான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து கிடையாது. மேலும் விவரங்களுக்கு 04329 – 228641, 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

India Post Payments Bank-ல் வேலை!... தமிழகத்தில் 50+ காலியிடங்கள்!... முழுவிவரம் இதோ!

Fri Feb 24 , 2023
இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தமிழகத்தில் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 01.03.2023.-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: நிறுவனம்: […]

You May Like