fbpx

தூள்..! பெண்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…! அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் தகவல்…!

கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை உள்ளே கொண்டு வருவதற்கு நினைக்கிறது. கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களிடம் அறிவு சார்ந்த விஷயங்களை கொண்டு செல்லும்போது, பேச்சாளர் மகாவிஷ்ணு போன்றவர்கள் மாணவர்களிடம் மூடநம்பிக்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியில் மதம் கலக்கக் கூடாது. பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இரண்டு நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வரின் முயற்சியால் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட்டில் ஜாபில் எனும் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் பெண்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் திருச்சி மட்டுமின்றி திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் பயனடைவர்.

English Summary

Employment opportunity for 5 thousand people including women.

Vignesh

Next Post

ராகுல் காந்திக்கு திருமணம்?. பெண் யார் தெரியுமா?. சூடுபிடித்துள்ள அரசியல் வட்டாரம்!. வைரலாகும் போட்டோ!

Wed Sep 11 , 2024
If it happens, it happen: Rahul Gandhi's wedding speculation heats up political circles

You May Like