ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று என்கவுன்டர் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள நிஹாமா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக குறிப்பிட்ட தகவலைப் பெற்ற பின்னர் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவத்தின் தேடுதல் குழுவினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தேடுதல் நடவடிக்கை பதிலடியாக என்கவுண்டராக மாறியது என்று கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை X இல் பதிவிட்டுள்ளதாவது “புல்வாமாவின் நிஹாமா பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் தொடரும்” என கதெரிவித்துள்ளது.
கடந்த மாதம், காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதி ஸ்ரீநகரில் உள்ள அகமதுநகர் காவல் நிலையத்திற்குட்பட்ட எலாஹிபாக் அல்னூர் காலனியில் வசிக்கும் அய்ஜாஸ் அகமது ஷேக்கின் மகன் டேனிஷ் ஐஜாஸ் ஷேக் (34) என அடையாளம் காணப்பட்டார்.
Read More: அமுல் பால் விலை உயர்வு..! இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய கட்டணம்..! பொதுமக்களுக்கு அதிர்ச்சி..!