பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்த வீரர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 27-ம் தேதி வரையில் 2,11, 905 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1, 67,387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.
இந்த 1,56, 214 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாக பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிலையில் விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2,442 வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.