சின்னத்திரை வெற்றி இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இதுவரையில் 300 நாட்களை கடந்துள்ள இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அந்த சீரியலில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தற்சமயம் நடந்திருக்கும் விஷயம் என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, புதிய பூட்ஸுடன் நடக்க பழகி வருவதாக அவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.