திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திமுக அரசிற்கு எப்படியாவது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் “திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை முதலில் திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஏனென்றால் திருச்சியில் இருந்து தொடங்கப்படும் எதுவும் வெற்றிகரமாக முடிவடையும் என்பது தான். திருச்சியில் தொடங்கிய இந்த முகவர்கள் கூட்டம் தற்போது சென்னையிலும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு எப்போதெல்லாம் கஷ்டம் வந்ததோ அப்போதெல்லாம் தஞ்சை மற்றும் சென்னை மாவட்டங்கள் தான் பலமாக துணை நின்றன எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனினும் ஒரு சிலர் கழக ஆட்சியின் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசு வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து அவதூறுகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்த அவர் கழகத் தோழர்களுக்கு நன்றாகத் தெரியும். திமுகவிற்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அந்த நேரங்களில் எப்படி வீறு கொண்டு எழ வேண்டும் என்று தெரிவித்தார். நம்மை ஏளனம் செய்கிறவர்களும் மூக்கில் விரல் வைக்கின்ற அளவு கழகத்திற்கும் தளபதிக்கும் மிகப்பெரிய வெற்றியை நாம் பரிசளிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார் நேரு.