கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு லட்சுமண் சவடி கட்சியில் இணைந்தார்.
கர்நாடகாவில் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை சீட் கொடுக்கப்படாத சிட்டிங் MLA-க்களில் சிலர் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எடியூரப்பா, ஹல்லாடி ஸ்ரீநிவாச ஷெட்டி ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டவில்லை.
இந்த நிலையில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலின்படி எதிர் கட்சியான காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள லிங்காயத் தலைவர் சோமண்ணா மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா என இரு முன்னாள் முதல்வர்களை பாஜக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.