திருச்சி சங்கிலியண்டபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியதால் அவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி சங்கிலிண்டபுரம் பகுதியைச் சார்ந்தவர் பர்ஜானா. இவர் அப்பகுதியைச் சார்ந்த ஆனந்த் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பர்ஜானாவின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனால் அவர் ஆனந்துடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த ஆனந்த் பர்ஜானாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவரை தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாக பர்ஜானா நேற்று திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினரின் விஷயம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் இளம் பெண்ணுடன் இருக்கும் வீடியோவை இளைஞர் வெளியிடுவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களை மக்கள் பொழுதுபோக்காகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தி வரும் வேலைகளில் சில நபர்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களிலும் சமூக வலைதளங்களின் வாயிலாக ஈடுபடுவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறத. இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது.