fbpx

ஆதிதிராவிடர் & பழங்குடியின மகளிருக்கு முத்திரைத்தாள் & பதிவுக் கட்டணத்தில் விலக்கு…! முழு விவரம்

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6% மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

English Summary

Exemption from stamp duty & registration fees for Adi Dravidian & Tribal women

Vignesh

Next Post

Viral | தீயில் எரியாத ஓரியோ பிஸ்கட்.. கேன்சரை பரப்பும் ரசாயணம் இருக்கா..? உண்மை என்ன..?

Sun Dec 22 , 2024
Oreo cookies laced with cancer-causing flame retardant chemicals? Viral video sparks huge uproar

You May Like