தேர்தல் இலவசங்களை முறைப்படுத்த உயர்மட்ட நிபுணர் குழு அமைப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை வழங்குவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன, ஏன் மத்திய அரசு இதில் உறுதியான முடிவெடுக்க தயங்குகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்..
இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் “ பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை” ஏற்படுத்துவதால், இலவசங்களின் நன்மை தீமைகளை தீர்மானிக்க குழு தேவை என்று கூறியது. இலவசங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது இந்த குழு ஆலோசனைகளை வழங்க வேண்டும்..
நிதி ஆயோக், நிதி ஆணையம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் பிற பங்குதாரர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவைக் இலவச வாக்குறுதிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குவது அவசியம்.. நிபுணர் குழு அமைப்பது குறித்து ஏழு நாட்களுக்குள் தங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபல் மற்றும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டனர்..
“இலவசங்கள் குறித்து நாடாளுமன்றம் விவாதம் செய்யும் என்று நினைக்கிறீர்களா? எந்த அரசியல் கட்சி விவாதம் நடத்தும்? எந்த அரசியல் கட்சியும் இலவசங்களை எதிர்க்காது. அனைவரும் அதை விரும்புகிறார்கள். வரி செலுத்துவோர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி ரமணா கூறினார்.