fbpx

விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு..!! EPFO வெளியிட்ட இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா..? மறந்துறாதீங்க..!!

பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி 12 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி சலுகைகளில் இலவச காப்பீடு மற்றும் ஓய்வூதிய சலுகைகளும் அடங்கும். அதன் அடிப்படையில், ஒரு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு பொதுவாக ஓய்வூதிய அடிப்படையிலான முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், அதிக ஊதியத்தில் ஓய்வூதியம் தொடர்பான விருப்பங்கள்/கூட்டு விருப்பங்களின் சரிபார்ப்புக்கான நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய EPFO கால அவகாசம் வழங்கியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் படி, இந்த நீட்டிப்பு தேவையான சமர்ப்பிப்புகளை முடிக்க அதிக நேரம் தேவைப்படும். நிறுவனங்கள் மற்றும் அவர்களது சங்கங்களின் பல கோரிக்கைகளை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலுவையிலுள்ள ஓய்வூதிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை ஜனவரி 31, 2025 வரை EPFO ​​நீட்டித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, செயல்முறை சுமூகமாக முடிக்கப்படுவதை உறுதி செய்ய 2025 ஜனவரி 15ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இனி ரயிலில் டிக்கெட் எடுத்தால் மட்டும் போதாது..!! இதையும் எடுத்துச் செல்ல வேண்டும்..!! இல்லையென்றால் அபராதம்..!!

English Summary

EPFO has extended the deadline for uploading pending pension applications till January 31, 2025.

Chella

Next Post

”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சி தான்”..!! ”நாங்கள் கிடையாது”..!! பிரதமர் மோடி பரபரப்பு பதிவு..!!

Wed Dec 18 , 2024
Prime Minister Modi has clarified that the central government fully respects Ambedkar.

You May Like