ஜூன் 30ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்படுவதாக கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக அரசு கூறியுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு சார்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் (பாமாயில்) போன்ற பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2.20 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றன.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்படுவதாக வரும் தகவலுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுவதாகவும், சமூக வலையதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 30ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.