சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி நகரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக தண்ணீர் எடுத்துக்கொள்வது குறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது போல தண்ணீரை தவறான முறையில் சுரண்டுவது ஒரு பாவம் என்றும், தண்ணீரின் எச்சரிக்கை நிலையை உணராமல் செயல்படும் குற்றவாளிகள் மீது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், தலைமை நீதிபதி டி. கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், “ஏதாவது ஒரு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் நீர் மட்டத்தைக் குறைப்பது பாவம். ஜோகன்னஸ்பர்க்கில் என்ன நடந்தது தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நகரத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. அவர்கள் ஒரு பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டனர். அந்த நிலைமை டெல்லியிலும் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
இந்த கூற்றுகள், தண்ணீர் பாதுகாப்பு குறித்து நாம் எவ்வளவு அவசரமாகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டியிருப்பதை உணர்த்துகின்றன. ஜோகன்னஸ்பர்க் அனுபவித்த ‘Day Zero’ நிலையை இந்திய தலைநகரம் சந்திக்க வேண்டாம் என்றுதான் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read more: வக்பு மசோதாவுக்கு எதிராக விஜய் வழக்கு.. தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!!