புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் சென்னையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புரோட்டா என்பது தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. சாலையோர கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சைவ மற்றும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் புரோட்டா நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். சமீப காலமாகவே தமிழகத்தில் பரோட்டாவினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன . சில மாதங்களுக்கு முன்பு கூட விருதுநகரை சார்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பரோட்டா சாப்பிட்டு மரணம் அடைந்தது நினைவு இருக்கலாம்.
இந்நிலையில் சென்னை வியாசர்பாடியை சார்ந்தவர் கார்த்திக் வயது 27 . இவர் தனது குடும்ப நண்பர்களுடன் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு இருக்கிறார் . சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்திருக்கிறார் கார்த்திக் . ஆசையாக சாப்பிட பரோட்டாவை எமனாக மாறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பரோட்டா தயாரிக்க பயன்படும் மைதா மாவு எளிதில் செரிமானம் ஆகாத ஒன்று. மேலும் அதன் மிருதுவான தன்மைக்காக அதில் சேர்க்கப்படும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் முட்டை ஆகியவையும் நம் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதிகமாக பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதில் நச்சுத்தன்மை இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இது தொடர்பாக காவல்துறையும் விசாரணை செய்து வருகிறது.