fbpx

மகிழ்ச்சி… விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 31-ம் தேதி வரை கால அவகாசம்…! ஆன்லைன் மூலம் செய்யலாம்

2024-25 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் (AICIL) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும்.

தற்போது, சிறப்பு பருவத்தில் நெல் சம்பா மற்றும் சிறிய வெங்காயம் பயிர்களும் இரபி பருவத்தில் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, தக்காளி, மரவள்ளி மற்றும் வாழை பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பருவத்தில் நெல் சம்பா பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ.549.82-ஐ 16.12.2024 தேதிக்குள்ளும் மற்றும் தோட்டக்கலை பயிரான சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2050.10-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

இரபி பருவத்தில் பாசிப்பயறு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.191.44-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், உளுந்து பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.228.23-ஐ 15.11.2024 தேதிக்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.315.67-ஐ 30.12.2024 தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.112.24-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும், மக்காச்சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.478.69-ஐ 30.11.2024 தேதிக்குள்ளும், பருத்தி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.350.66-ஐ 17.03.2025 தேதிக்குள்ளும் மற்றும் கரும்பு பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1165.84-ஐ 31.03.2025 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும் தோட்டக்கலை பயிர்களான தக்காளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1017.64-ஐ 31.01.2025 தேதிக்குள்ளும், மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.619.48-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும் மற்றும் வாழை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1857.44-ஐ 28.02.2025 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும். எனவே சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ- அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aathar card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

English Summary

Farmers have till 30th to get crop insurance.

Vignesh

Next Post

தொடர் தாக்குதல்!. இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை நிறுத்திய பிரான்ஸ்!. அதிபர் மேக்ரான் அதிரடி!

Sun Oct 6 , 2024
Serial attack!. France has stopped supplying weapons to Israel! President Macron action!

You May Like