fbpx

மகிழ்ச்சி செய்தி…! இந்த 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம்…!

தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர்காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டிப்பு. இத்திட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை (15.11.2024) நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 30.11.2024 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, சனி (23.11.2024) மற்றும் ஞாயிற்று கிழமையில் (24.11.2024) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Farmers in 27 districts have time to get crop insurance

Vignesh

Next Post

டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...!

Wed Nov 20 , 2024
Local holiday for Kanyakumari district on December 3rd

You May Like