fbpx

சட்டப்பேரவை இடைநீக்கம்  | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

கூட்டத்தொடர் முழுவதும் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவினர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்படுகின்றனர். மேலும், சட்டமன்றத்தில் இருந்து சம்மந்தப்பட்ட நாட்களில் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் வருகின்றனர். அதேபோல நேற்று அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன் நடப்பு கூட்டத்தொடர் முடியும் வரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Read more ; ஷாக்!. இந்த 35 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது!. லிஸ்ட் இதோ!

English Summary

The AIADMK will hold a hunger strike in Chennai today to protest against the suspension of the entire session from the Legislative Assembly.

Next Post

24 மணிநேரத்தில் சோகம்!. மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி!. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!.

Thu Jun 27 , 2024
Bihar: Eight die in 24 hours as lightning strikes in parts of state, CM Nitish Kumar announces ex-gratia

You May Like