fbpx

“அப்பா என்னை மன்னித்துவிடு”; ‘மனைவிக்கு என் உயிர்தான் வேண்டுமாம்’!. கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!. கர்நாடகாவில் பகீர்!

Suicide: கர்நாடகாவில் மனைவியின் துன்புறுத்தலை தாங்கமுடியாமல் இளைஞருக்கு ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடாக மாநிலம் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என, பீட்டரை அவரது மனைவி நிர்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்துள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று, ஜோயல், ஞாயிறுக்கிழமை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, தனது சகோதரர் பீட்டர் இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, அவரது சடலத்தின் அருகில் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், தனது மரணத்திற்கு காரணம் எனது மனைவியின் கொடுமையே என குறிப்பிட்டு இருந்தது. கடிதத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் கடந்த மூன்று மாதங்களாக குடும்பத் தகராறு இருப்பதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “அப்பா, மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னை துன்புறுத்துகிறாள், அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்றும் பீட்டர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை இழந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இதுகுறித்து ஜோயல் கூறுகையில், “எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும், பெண்ணை கைது செய்ய வேண்டும், என் சகோதரனைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது” என்று கூறினார். இதையடுத்து ஜோயல் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Readmore: காங்கோவில் போர் மூளும் அபாயம்!. கிளர்ச்சிப் படையினரின் அட்டூழியம்!. சரணடைந்த ராணுவம்!. வெளியேறும் மக்கள்!.

English Summary

“Father, forgive me”; ‘My wife wants my life’!. A young man committed suicide by writing a letter!. A pauper in Karnataka!

Kokila

Next Post

மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் கடன் பெறலாம்.. இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க...

Tue Jan 28 , 2025
Is it possible to get a personal loan even with a bad credit score?

You May Like